Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 11 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதானத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது என மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் 50 இலட்சம் ரூபாய் செலவில் 3,336 கியூப் மண் மைதானத்துக்கு போடப்பட்டது. அத்துடன், கனரக இயந்திரங்கள், எரிபொருள் மற்றும் இதர சேவைகளுக்காக இரண்டரைக் கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
இதேவேளை, சுகாதாரத்துறை மேம்பாட்டு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சபையின் 10 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு மைதானத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மைதானம் நான்கரை அடிவரை உயர்த்தப்பட்டு, நேர்த்தியாக செப்பனிடப்பட்டு, விளையாட்டுத்துறைக்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago