Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 29 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கல்முனை, நற்பிட்டிமுனைக் கிராமத்தில் 30 வயதுடைய ஆணொருவரின் சடலம், அவர் வசித்த வீட்டிற்கு அருகிலிருந்த உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (29), மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நற்பிட்டிமுனை, கிட்டங்கி வீதியைச் சேர்ந்த பொன்னுத்துரை தர்மேந்திரா (வயது 30) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவர், நேற்றுச் சனிக்கிழமை (28) பகல், தனது 30ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதிலும் நண்பர்களுக்கு விருந்து வைத்துக் களிப்பதிலும் ஈடுபட்டிருந்துள்ளார்.
அதேவேளை, இவரது உறவினர் முறையான ஒருவர் இறந்த ஒருவருட ஆண்டு அமுது (ஒரு வருட திவசம்) இன்றையதினம் என்பதால் அதற்காக பொருட்கள் வாங்குவதிலும் ஈடுபட்டிருந்துள்ளார்.
இவரது, மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
50 minute ago