Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 மார்ச் 25 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமே, நிலையான அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்த முடியுமென, சமூக நல்லிணக்க அரச கரும மொழிகள் மற்றும் இந்துக் கலாசார அமைச்சர் மனோ கணேசனின் தேசிய இணைப்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்தார்.
சமூக நல்லிணக்க அரச கரும மொழிகள் மற்றும் இந்துக் கலாசார அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம், அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் கனிஷ்ட கல்லூரியில் 09 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நுளைவாயிலைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
அதிபர் எஸ்.றினோஸ்டீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர், நாட்டில் இனம், மதம், ஜாதி பேதங்கள், பிரதேச வெறுபாடுகள் இன்றி, அமைச்சர் மனோ கணேசன் சேவையாற்றி வருகின்றார் எனவும் இதன்மூலம் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
அபிவிருத்திச் செயற்பாடுகளுடன், அனைத்து இனங்களினதும் கலை, கலாசார விழுமியங்கள் வளர்க்கப்பட்டு, மொழி உரிமையை ஏற்படுத்துவதன் மூலம், தேசிய சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தமது அமைச்சு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் இன ஐக்கியத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் வகையில், எதிர்வரும் காலங்களிலும் தமது அமைச்சின் மூலம் பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago