Editorial / 2019 ஜூன் 16 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை- அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில், கணிதம், இஸ்லாம் ஆகிய பாடங்களுக்கான பயிலுநர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப்பரீட்சை, நாளை (17) இடம்பெறவுள்ளதாக பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார்.
நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள், பதிவுத் தபாலின் மூலம் உரிய விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றும் இம்முறை அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரிக்கு இரண்டு தொகுதிகளிலும் இருந்து மொத்தமாக 5 பாடநெறிகளுக்காக 350 ஆசிரிய பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
நாடளாவிய ரீதியிலுள்ள 19 தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு இவ்வருடம் 8,000க்கும் அதிகமான பயிலுநர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025