Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவுகின்ற கடும் வெப்பநிலையையடுத்து மீன்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதுடன் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் இதேவேளை, பொத்துவில் முதல் பெரியநிலாவணை பகுதி வரையுள்ள கடற்பிராந்தியத்தில் மீன்கள் பிடிபடும் வீதம் குறைவடைந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு அடிக்கடி அதிகரித்துக் காணப்படுகின்றமை கடும் வரட்சியுடனான காலநிலை நிலவுகின்றமை ஆகிய காரணங்களே மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடல் மீன்களில் ஒரு கிலோ விளாமீன் 900 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1200 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ1200 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 1500 ரூபாயாகவும் வளையா மீன் 1000 ரூபா ஆகவும் நண்டு ஒரு கிலோ 950 ரூபா ஆகவும் தற்போது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளினால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகள் மீன் சந்தைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இதர சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
அத்துடன் அதிகளவான நன்னீர் மீன் இனங்கள் சில இடங்களில் அதிகளவாக பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போதிலும் விலை அதிகமாக உள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .