Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசியல் அமைப்புக்கான பொதுமக்களின் பங்களிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச 'யூத் அசம்பிலி ஸ்ரீ லங்கா' மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தின் பிராந்திய உறுப்பினர்களுக்கான நியமனங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
யூத் அசம்பிலி ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு பணிப்பாளர் பைஷல் இஸ்மாயில் தலைமையில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, நியமனங்களை மெஸ்பரோ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் இந்நியமனங்களை வழங்கி வைத்தார்.
பிரதிப் பணிப்பாளராக அதிபர் ஏ.எல்.யாசீன், அரசியல்துறை மற்றும் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளராக அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், இணைப்பாளராக வைத்தியர் ஜே.யூசுப், தேசிய இணைப்பாளராக எம்.ஏ.சி.பாஹிக், ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளராக ஊடகவியலாளர் ஏ.எல்.றமீஸ், ஒருங்கிணைப்பு பணிப்பாளராக ஊடகவியலாளர் எம்.ஐ.முஹம்மது பைஷல், கள இணைப்பாளராக எஸ்.எம்.றிஜால்டீன் ஆகியோர் இப்பதவிகளுக்கான நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.
6 minute ago
13 minute ago
25 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
25 minute ago
36 minute ago