Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூன் 13 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு, எம்.எஸ்.எம்.ஹனீபா, வி..சுகிர்தகுமார்
அம்பாறை, திருக்கோவில் ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில் 1990ஆம் ஆண்டு 123 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை விடுதலைப் புலிகள் கடத்திச்சென்று கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தின்போது தப்பிவந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், தனக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி மேற்கொண்டுவந்த சாகுவரையிலான உண்ணாவிரதத்தை ஞாயிற்றுக்கிழமை (12) மாலை கைவிட்டுள்ளார்.
அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தைச்; சேர்ந்த மனோஜ் பிரியந்த சிறிவர்தன என்ற பொலிஸ் சார்ஜனே தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் திருக்கோவில், ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில் சனிக்கிழமை (11) முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார். அம்பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.எல்.றணவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்;ந்து இவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார்.
இவர், 1990ஆம் ஆண்டு கல்முனைப் பொலிஸில் சேவையாற்றியவர் ஆவார். அந்த ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி 123 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விடுதலைப் புலிகளால் கடத்திச்செல்லப்பட்டு கஞ்சி;குடியாறு, ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திலிருந்து குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மாத்திரம் தப்பியிருந்தார். காயங்களுடன் தப்பியோடி மீண்டும் கடமையில் உள்வாங்கப்பட்ட தன்னை 2003ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் காரணமாக சேவையிலிருந்து இடைநிறுத்தியதாக குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உண்ணாவிரதத்தின்போது தெரிவித்திருந்தார்.
தன்னைப் பணியிலிருந்து இடைநிறுத்தியமை தொடர்பாக மீள்பரிசீலனைக்காக விண்ணப்பித்தும், இதுவரையில் தனக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் குறித்த பொலிஸ் சார்ஜனிடம் இன்று திங்கட்கிழமை கேட்டபோது, 'திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பண்டார, உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு வந்து தன்னைச் சந்தித்ததுடன், அம்பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.எல்.றணவீரவிடம் அழைத்துச் சென்றார். அங்கு அவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, எதிர்வரும் 20ஆம் திகதி கலந்துரையாடலுக்கு கொழும்பு பொலிஸ் தலைமைக் காரியாலயத்தால் தன்னை அழைத்துள்ளதாகவும் அக்கலந்துரையாடலுக்கு பொலிஸார்pன் உதவியுடன் தன்னை அழைத்து வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலுக்கு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் செல்லவுள்ளதாகவும் அங்கு எனது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காதவிடத்து, அம்பாறை நகரில் மீண்டும் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை குடும்பத்தாருடன் இணைந்து மேற்கொள்வேன்' என்றார்.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago