Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 25 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி கடற்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை இன்னும் ஒரு மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சாய்ந்தமருது கடலின் அடிப்பரப்பில் தேங்கியுள்ள சுனாமியினால் கொண்டுசெல்லப்பட்ட 'கல்' போன்ற எச்சங்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த அம்பாறை மாவடடத்திற்கான இப்தார் நிகழ்வும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நேற்று (24) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றகையில்,
“நுரைச்சோலையில் கட்டப்பட்டு பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு வழங்கப்படாமல் பாழடைந்து கிடக்கின்ற குறித்த வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என நாங்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் இணையும்போது ஒப்பந்தம் செய்திருந்தோம்.
கடந்த காலங்களில் அதற்கான முன்னெடுப்புகளை செய்து வந்தோம். இன்று கூட பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்தித்து பேசினோம். அவர்கள் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இவ்வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளார்.
இங்குள்ள 3,000 பேருக்கு தொழில் வழங்கக்கூடிய தொழில்பேட்டை ஒன்றை சம்மாந்துறையில் அமைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். அதற்கு அங்குள்ள அரசியல்வாதி எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இருந்தாலும் யார் ஆதரித்தாலும் இல்லாவிட்டாலும் இன்னும் ஒரு வருடத்துக்குள் அம்பாறை மாவட்டத்தில் தொழில்பேட்டை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
மக்களுக்கு உதவக்கூடிய விதத்தில் உதவிகளை தேடிச்சென்று அவற்றைப்பெற்று மக்களது கஷ்டங்களை போக்கவேண்டிய மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் கிடைக்கவிருக்கும் உதவிகளை தடுக்க முயற்சிப்பது வேதனையான விடயம் என்றார்.
“புல்மோட்டை முதல் பொத்துவில் வரையுள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் தான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் மீன்பிடி அமைச்சரைக் கொண்டுவந்து மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதத்தில் பாரிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதேபோல இப்பிராந்திய விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தாங்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் தொடர்புபட்ட அமைச்சர்களைக் கொண்டுவந்து தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சீனித் தொழிலுடன் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் நான் அமைச்சரவை பத்திரம் ஒன்றையும் கொண்டுசென்றேன். அதற்கான உபகுழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அந்த பிரச்சினைகளும் இன்னும் ஒரு மாதத்துக்குள் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு அம்பாறை மாவட்டத்தில் பாராளமன்ற பிரதிநிதித்துவமோ மாகாணசபை பிரதிநிதித்துவமோ இல்லாத போதிலும் தேசிய மட்டத்தில் எங்களிடம் இருக்கும் பலத்தைக்கொண்டு அம்பாறை மாவட்டத்திலும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் தெரிவித்தார்.
25 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
4 hours ago