2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நீரிழிவு நோயை பரிசோதிக்கும் கருவிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு சீட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை மெடி ரெப்ஸ்  ஸ்ரீலங்கா நிறுவனத்தால் ஒரு இலட்சம் ரூபாய்  பெறுமதியில் நீரிழிவு நோயை பரிசோதனை செய்யும் ஒருதொகுதி கருவிகள் இலவசமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

முதற்கட்டமாக அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று பிரதேச ஊடகவியலாளர்கள் 25 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நீரிழிவு நோய் பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டன.

இக்கருவிகளை பெற்றுக்கொள்ளாத அம்பாறை மாவட்ட பிரதேசத்திலுள்ள ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இக்கருவிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மெடி ரெப்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜாபிர் சாலி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X