2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நிர்வாகத்தெரிவு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின்  புதிய நிர்வாகத்தெரிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டுறவு அபிவிருத்தி கல்முனைப் பிராந்திய உதவி ஆணையாளர் வை.எல்.எம்.லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.

நிர்வாகத்தினரை தெரிவுசெய்வதற்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட 14 கிளைக்குழு நிர்வாகக் கட்டமைப்பின் கீழுள்ள 100 பேர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களின் மூலம் மத்திய நிர்வாக உறுப்பினர்கள் 9 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் அடிப்படையில் இளைஞர்கள் 2 பேரை தெரிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 4 பேர் போட்டியிட்டு அதில் எஸ்.எல்.பசீல்  64 வாக்குகளையும் ஏ.எஸ்.எம்.நயீம்  56 வாக்குகளையும் பெற்று இளைஞர்கள் சார்பில் தெரிவு செய்யப்பட்டனர்.

மகளீர் சார்பில் எவ்வித வாக்கெடுப்புமின்றி இரண்டு பேர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர். அதில் ஏ.சீ.றம்ஸானா மற்றும் ஏ.ஜீ.பர்ஸானா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஏனையோர் 5 பேரை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 10 பேர் போட்டியிட்டு அதில் எஸ்.எம்.அமீன்  62 வாக்குகளையும் ஏ.எம்.இர்பான் 60 வாக்குகளையும் ஐ.எல்.ஹமீட் 52 வாக்குகளையும் எம்.ஏ.எம்.றபியுதீன்  47 வாக்குகளையும் எஸ்.எம்.கலீல் றஹ்மான் 46 வாக்குகளையும் பெற்று ஏனையோர் சார்பில் தெரிவு செய்யப்பட்டனர்.

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக மீண்டும் ஏ.எம்.இர்பானும் உப தலைவராக ஐ.எல்.ஹமீட் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X