2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நிலக்கண்ணிவெடி மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 17 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள பாதையிலிருந்து 10 கிலோகிராம் நிறையுடைய நிலக்கண்ணி வெடியொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த வீதியால் பயணித்த பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று நிலக்கண்ணிவெடியை மீட்டுள்ளதுடன், அதனைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையிலும் கஞ்சிகுடியாறு இராணுவ முகாம் குண்டு செயலிழக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X