2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நெல் கொள்வனவு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்ட விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்தின் நிர்ணய விலையில் சிறுபோக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (25) முதல் ஆரம்பமாகியுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்தார்.

முதற்கட்டமாக நாவிதன்வெளி, தம்பட்டை, அக்கரைப்பற்று, மாந்தோட்டம், அம்பாறை நகர், பொல்லாபெத்த, தீகவாபி உள்ளிட்ட  நெற் களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிர்ணய விலையான நாடு 38 ரூபாய்க்கும் சம்பா 41 ரூபாய்க்கும் கீரிச்சம்பா 50 ரூபாய்க்கும் நெல் கொள்வனவு மாவட்டத்தின் மேற் குறித்த களஞ்சியங்களில் இடம்பெற்று வருவதாகவும் பிராந்திய முகாமையாளர் கூறினார்.

இம் மாவட்டத்தில் 01 இலட்சத்து 24 ஆயிரம் ஏக்கர் காணிகளில் இம்முறை நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X