2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நுளம்புகள் பெருகும் அபாயம்; விழிப்புடன் இருக்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, கல்முனை வடக்கு சுகாதார பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் இருப்பதால், மக்களை விழிப்புடன் இருக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர்   ஆர்.கணேஸ்வரன், இன்று (20) ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்முனை வடக்கு சுகாதாரப் பணிமனைக்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு, நற்பிட்டிமுனை, மணல்சேனை ஆகிய பிரதேசங்களில் டெங்கொழிப்பு நடவடிக்கைகளை  பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இக்காலப்பகுதியில் காய்ச்சலினால் பீடிக்கப்படுவோர் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுமாறும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X