2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நாவலடிவட்டை விவசாயக்காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 14 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவலடிவட்டையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வதற்கும் எதிர்வரும் சிறுபோகக் காலத்தில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுவதற்கும் அனுமதியளிக்கப்படுமென்று மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்க உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை  தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்த அவர், 'கடந்த 30 வருடகால யுத்த நிலைமையில் கூட, நாவலடிவட்டையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளில் விவசாயச் செய்கையில் அவர்கள் ஈடுபட்டுவந்தனர். இக்காணிகளுக்கான உத்தரவுப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இறக்காமம் பிரதேச செயலக, தமணப் பிரதேச செயலக எல்லைப் பிரச்சினையை காரணங்காட்டி அக்காணிகளில் விவசாயம் செய்ய வேண்டாமென்று தடை விதிக்கப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியதாகும்.  எனவே, இந்த எல்லைப் பிரச்சினை தொடர்பில் உடனடியாக குழுவொன்றை நியமித்து தீர்வு காண வேண்டும்' என்றார்.  

'எல்லைப் பிரச்சினையைக் காரணம் கூறி இந்த விவசாயக் காணிகளில் விவசாயம் செய்ய வேண்டாமென்று தடை விதித்துள்ளதால், அம்பாறை மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X