2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நிவாரணம் சேகரிக்கும் பணியை முன்னெடுக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 மே 19 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் சேகரித்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து ஜும்மாப் பெரிய பள்ளிவாசல்களும் முன்வர வேண்டும் என தேசிய முஸ்லிம் கவுன்சில், இன்று வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் தேசிய முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில், 'கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வெள்ளம் மற்றும் மண்சரிவால் பலர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அவசர நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன. இதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் நிவாரணம் சேகரிக்கும் பணிகள்; முன்னெடுக்கப்படுகின்றன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் நிவாரணம் வழங்குவதற்கு ஆர்வம் காட்டும்போதிலும், அவற்றை நிறுவன ரீதியாக ஒருங்கிணைப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து ஜும்மாப் பெரிய பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு நிவாரணம் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுமாயின், அது சிறந்த முறையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அப்பணியை முன்னெடுப்பதற்கு சம்மந்தப்பட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்' என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X