Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் டயலொக் அலைபேசி நிறுவனத்தினால் அதிஷ்டம் விழுந்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி பெண் ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த நபரொருவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
டயலொக் அலைபேசி கம்பனியில் 10 இலட்சம் ரூபாய் அதிஷ்டம் விழுந்துள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்வதற்காக வங்கியில் 10 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுவதாக கூறி பெண் ஒருவரை ஏமாற்றி பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,நேற்று கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு வேறோரு வழக்கு விசாரணைக்காக சமூகமளித்திருந்த குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago