2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பணம் திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றிலிருந்து 375,000 ரூபாவை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் ஒருவரை  இன்று  வெள்ளிக்கிழமை கைதுசெய்ததுடன்,  அவரிடமிருந்து அப்பணத்தையும் கைப்பற்றியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மேற்படி முச்சக்கரவண்டிச் சாரதி, அப்பணத்தை   முச்சக்கரவண்டியினுள்  வைத்துவிட்டு கடையொன்றுக்குச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, முச்சக்கரவண்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது. பணம் கொள்ளை போனமை தொடர்பில்  பொலிஸில் முச்சக்கரவண்டிச் சாரதி  முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த கடைக்கு முன்பாக பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி கமெராவின் உதவியுடன் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினார்.  

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் இதற்கு முன்னரும் பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய நிலையில் கைதுசெய்து விளக்கமறியலிலிருந்து  பிணையில் வெளிவந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X