2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பனை விதை நடும் நிகழ்வு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

தேசிய சூழல் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பனை அபிவிருத்திச் சபையின் கல்முனை மாவட்ட அலுவலகம் மற்றும்  ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பனை விதைகளை நடும் வைபவம் நேற்று (30) பனங்காடு, பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  பனை அபிவிருத்திச் சபையின் கல்முனை மாவட்ட இணைப்பாளர் திருமதி யோகேஸ்வரி சௌந்தரநாதன், போதனாசிரியை திருமதி. சந்திராவதி ரமணன், பிரதேச செயலாளரின் வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. பிருந்தாயினி சுதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சுபாகரன் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.இராசசிறி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .