2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பல்கலைக்கழக மாணவர் இருவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல், இன்று சனிக்கிழமை(10) உத்தரவிட்டாh.;

கடந்த வாரம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இடம்பெற்ற அசம்பாவிதத்தில் நிர்வாக கட்டடத்;துக்கு சேதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக 13 மாவணர்களை 6ஆம் திகதி கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இச் சம்பவத்தில் தொடர்புடைய 2ஆம் வருடத்தில் கல்விகற்கும் மாணவர்களான மேலும் இருவரை இன்று சனிக்கிழமை பொலிஸார் கைது செய்து, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்திய போதே  இருவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X