2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பெண் கடத்தல்; இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 09 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கடத்தப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை ஞாயிற்றுக்கிழமை (08) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி பெண் வீட்டிலிருந்து கடந்த ஐந்தாம் திகதி இரவு கடத்தப்பட்டபோது, கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரி அலைபேசியில் எடுத்த படத்தை ஆதாரமாகக் கொண்டு 23, 36 வயதுடைய இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மேற்படி பெண்ணை இதுவரையில்; கண்டுபிடிக்காத நிலையில், இவரது கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இவரது முன்னாள் கணவரைத் தேடுவதாகவும் பொலிஸார் கூறினர்.

கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற இவர், தனது பிள்ளைகளுடன் வாழ்கின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X