2025 மே 22, வியாழக்கிழமை

பாண்டிருப்பில் புதிய ஆயுள்வேத வைத்தியசாலை

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பாண்டிருப்புப் பிரதேசத்தில் புதிதாக ஆயுள்;வேத வைத்தியசாலையொன்றை  நிர்மாணிப்பதற்காக 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், இன்று  செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரிடம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை இல்லாமையினால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இங்கு புதிய ஆயுள்வேத வைத்தியசாலை இயங்கும் பட்சத்தில் பாண்டிருப்பு, கல்முனை, சேனைக்குடியிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, துறைநீலாவணை ஆகிய பிரதேச மக்கள் நன்மையடைவார்களெனவும் அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X