Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இந்த வருடத்தின் ஜனவரி முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பொத்துவில் சட்ட உதவி நிலையத்தின் மூலம் வழங்கப்பட்ட சேவைகளில் 3,729 பேர் பயனடைந்துள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பொத்துவில் நிலையப் பொறுப்பதிகாரியும் சட்ட உத்தியோகஸ்;தருமான எம்.ஏ.கே.எஸ்.பஹிமா தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெறும் இந்தச் சேவைகளில் பொதுவான விடயங்களுடன் காணிச்சட்டம், குடும்பச்சட்டம், அரசியலமைப்பு திருத்தச்சட்டங்கள், மத்தியஸ்தசபைக்கான சட்டம்;, மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், அடிப்படை உரிமைகள் தொடர்பிலும் இந்த உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய பரிகாரங்கள், குடும்பப் பிணக்குகளுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்கக்கூடிய நிவாரணங்கள், நீதிமன்ற முறைமைகள், ஆவணங்களின் முக்கியத்துவம் ஆகியன தொடர்பில் விழிப்புணர்வூட்டப்பட்டன.
மேலும் சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், தாபரிப்பு போன்ற விடயங்களில் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், 447 பேர் இலவச சட்ட ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர்.
15,000 ரூபாய்க்கு கீழ் மாதாந்த வருமானம் பெறும் 102 குடும்பங்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு, இலவசமாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
432 பேருக்கு இலவச ஆவணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. 41 சட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டதன் மூலம் 2,124 பேர் விழிப்புணர்வூட்டப்பட்டனர்.
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமூதாயச் சீர்திருத்தத் திணைக்கள அலுவலர்கள், மத்தியஸ்தசபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசாங்க சேவை அலுவலர்களுக்காக அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், நீதிமன்ற முறைமைகள், ஆவணங்களின் முக்கியத்துவம் தொடர்பில் நடத்தப்பட்ட 10 செயலமர்வுகளில் 235 பேர் பயனடைந்தனர்.
15 நடமாடும் சேவைகளின் மூலம் 389 பேர் நன்மையடைந்தனர்.
பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், கிராம உத்தியோகஸ்தர்கள், மகளிர் சங்க அங்கத்தவர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமூதாயம் சார் நிறுவன உத்தியோகஸ்தர்கள்;, கள அமைப்பில் பணியாற்றுவோர், தாதிகள், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், சமூர்த்தி வறுமை ஒழிப்புத்திட்டப் பயனாளிகள், மத்தியஸ்தசபை உறுப்பினர்கள் ஆகியோர் இதில் பங்குபற்றிப் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago