2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பொத்துவில் வைத்தியசாலையில் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

Niroshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் கடைமையை செய்யவிடாது இடையூறு விளைவித்த நபர்களை கைது செய்யுமாறு கோரி நாளை வெள்ளிக்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம். இஸ்ஸதீன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

திங்கட்கிழமை(09) மாலை விபத்தொன்றில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கும்போது, வெளியில் நின்ற சிலர் வைத்தியர்களுக்கும் மருத்துவ தாதி உத்தியோகத்தர்களுக்கும் கடமையை செய்யவிடாது பங்கம் ஏற்படுத்தினார்கள். இதனால்,வைத்தியர்கள் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,சம்மந்தப்பட்டவர்களை உடன் கைது செய்யுமாறும் கடமைக்கு பங்கம் விளைவித்தமையைக் கண்டித்தும் நாளை வெள்ளிக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 04 மணி வரை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

இதன்போது,அவசர சிகிச்சைகள் மாத்திரம் இடம்பெறும்.

இவர்களை கைது செய்யாத பட்சத்தில் திங்கட்கிழமை (16) தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .