2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பொதுமக்களுக்கும் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் முறுகல்

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி 60ஆம் கட்டைப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் கடந்த 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் போது இடம்பெயர்ந்து மீண்டும் தனது சொந்த இடங்களுக்கு இன்று (07) திங்கட்கிழமை சென்று குடியமர்வுக்காக வேண்டி காணிகளை துப்பரவு செய்ய முற்பட்டபோது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு பொதுமக்களுக்கும் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தினை கேள்வியுற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.றொபின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர்  உள்ளிட்ட குழுவினர் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்து சுமூக நிலையை ஏற்படுத்தியுள்ளதோடு, இதற்கான சுமூகமான தீர்வினை பெற்றுக் கொடுக்கமாறு பொத்துவில் பிரதேச செயலாளரை கேட்டுள்ளனர்.

இதற்கான தீர்வினை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மூன்று வார காலத்துக்குள் பெற்றுத் தருவதாக பிரதேச செயலாளர் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலவரத்தினால் இப் பிரதேசத்திலிருந்து சுமார் 30 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .