Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 23 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
புதிய அரசியலமைப்புக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையைக் கோரும் தனிநபர் பிரேரiணையை எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'புதிய அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் தொடர்பில் எமது நாட்டில் பல்வேறு விதமான யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த மூன்று தசாப்தகாலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நியாயமான அதிகாரப்பகிர்வைக் கோரி நிற்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் மத்தியில் வடமாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்புக்கான கொள்கை, வரைவு போன்ற முன்மொழிவுகளை வடமாகாண சபையில் சமர்ப்பித்து இம்முன்மொழிவுகள் மீதான விவாதம் வடமாகாண சபையில் முழுமை பெற்று அம்முன்மொழிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு வடமாகாண சபையால் மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
'கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கிழக்கு மாகாண சபை அதனுடைய முன்மொழிவுகளைத் தயாரித்து எமக்கான நியாயமான தீர்வுத்திட்டம் தொடர்பான முன்மொழிவுகளையும் புதிய அரசியலமைப்புத் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளையும் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து, மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகள் பரிமாறப்பட்டு இம்முன்மொழிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
கிழக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்படும் இத்தீர்மானங்கள் நமது நாட்டில் வாழும் பல்லின மக்களுக்கிடையில் ஐக்கியம், அமைதி, பரஸ்பர புரிந்துணர்வுகளை கட்டியெழுப்பபடக் கூடியதாகவும், சகல இன மக்களும் நன்மை அடையக் கூடிய வகையிலும் இத் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரியே தனிநபர் பிரேரனையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
18 minute ago
24 minute ago