2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

புதிய நியமனம்

Niroshini   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அஸ்லம் மௌலானா

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த ஏ.ரி.எம்.றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை இன்று செவ்வாய்க்கிழமை காலை அம்பாறை நகரில் அமைந்துள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றி வந்த ஏ.ஆர்.எம்.இர்ஷாத், திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு இடமாற்றப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X