2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புதிய நியமனம்

Niroshini   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான  எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று  பிரதேச செயலகப் பிரிவுக்கான இணைப்பாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழிலதிபர் மொஹமட் இப்றாஹிம் நிர்பான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் (எஸ்டோ) அமைப்பில் நடைபெற்ற வைபவமொன்றின்போது வழங்கி வைத்தார்.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,  வர்த்தக, வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.மஹ்றூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X