2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

புனரமைப்பு வேலை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறுகுளத்துக்கான புனரமைப்பு வேலை இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உணவு, விவசாய ஸ்தாபனத்தின் செயற்றிட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் 63 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக்குளத்தின் அணைக்கட்டு உள்ளிட்டவை புனரமைக்கப்படவுள்ளது.

சிறுபோக நெற்செய்கைக் காலத்தில் 1,100 ஏக்கர் நெற்செய்கைக் காணிகளுக்கு இக்குளத்திலிருந்து நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இக்குளத்தின் அணைக்கட்டு மற்றும் வான்கதவுகளை மேலும் 03 அடிக்கு உயர்த்தி புனரமைப்புச் செய்வதன் மூலம் மேலும் 600 ஏக்கருக்கு நீர் விநியோகிக்க முடியுமென நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெ.தவராஜா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X