2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பாலமுனை ஹோமியோபதி நிலையத்துக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 30 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பாலமுனை ஹோமியோபதி மத்திய சிகிச்சை நிலையத்துக்கு பிரதி சுகாதார அமைச்சர் பைஷால்ல் காசீம் விஜயம் செய்து சுமார் 07 இலட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்களையும் 10 இலட்சம் ரூபாய்  பெறுமதியான மருந்து வில்லைகளையும்  இன்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.

இதன்போது பிரதியமைச்சர் தெரிவிக்கையில்,  "இந்த ஹோமியோபதி மத்திய நிலையத்தை சீர்செய்வதற்காக 02 இலட்சம் ரூபாய்  ஒதுக்கியுள்ளேன். அத்துடன், மிக முக்கிய தேவையாக காணப்படுகின்ற மலசலகூடத்தை கட்டுவதற்கு மேலும் 02 இலட்சம் ரூபாவை  உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படும்' என்றார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், அட்டாளைச்சேனை தள ஆயுர்;வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X