Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்லம் எஸ்.மௌலானா
பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச இறையாண்மையுடனான அதிகாரப் பகிர்வு புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படுவதுடன், சிறுபான்மையினருக்கான காப்பீடும் உறுதி செய்யப்பட வேண்டுமென மனித அபிவிருத்தித் தாபனம் தயாரித்துள்ள முன்மொழிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மனித அபிவிருத்தித் தாபனத்தின் இணைப்பாளர் பி. ஸ்ரீகாந்த் கருத்து தெரிவிக்கையில்,
'எமது மனித அபிவிருத்தித் தாபனம், அம்பாறை மாவட்டத்திலுள்ள 06 முக்கிய சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து அரசியல் யாப்பு சீர்திருத்த முன்மொழிவுகளைத் தயாரித்துள்ளது.
மூன்றாம் கட்டமாக காரைதீவிலுள்ள எமது தாபனத்தின் தலைமையகத்தில் கடந்த திங்கட்கிழமை (01) ஒன்றுகூடி இந்த முன்மொழிவுகளை உள்ளடக்கி இறுதி வரைபை தயாரித்துள்ளோம்.
இதனை இலங்கை அரசியல் யாப்பு சீர்திருத்தக் குழுவுக் எதிர்வரும் தினங்களில் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் மேற்படி குழு, அம்பாறைக்கு வருகை தரும்போது நேரடியாகவும் சமர்ப்பணம் செய்யத் தயாராகவிருக்கிறோம்.
இலங்கையில் பல்லின பல்சமய சமூகங்கள் வாழ்வதால் அனைத்து மதங்களுக்குமான கௌரவம் மற்றும் உரிமைகள் அரசினால் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் உச்சக்கட்ட அதிகாரம் குறைக்கப்படுகின்ற அதேவேளை, நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்ட வேண்டும்.
பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச இறையாண்மையுடனான அதிகாரப் பகிர்வு உள்ளடக்கப்பட வேண்டும்.
சிறுபான்மையினருக்கான காப்பீடு கட்டாயம் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட வேண்டும்.
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு அரச கரும மொழிகளும் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
சுயாதீன ஆணைக்குழுக்களைக் கண்காணிக்க மீயுயர் சபையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
மனித உரிமைகளுக்கு இன, மத பேதமின்றி உயரிய அந்தஸ்து வழங்கப்படவேண்டும்.
நாடாளுமன்றத்திலுள்ள குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மன்) முறைமை மாகாண மட்டத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இவையே எம்மால் தயாரிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளின் சாராம்சமாகும்' எனக் குறிப்பிட்டார்.
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago