2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 24 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, ஒலுவில் பள்ளக்காடுப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆற்று மணல் அகழ்வில் ஈடுபடுவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து,  குறித்த இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டு இச்சந்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது பெக்கோ இயந்திரச் சாரதி ஒருவரையும் டிப்பர் வாகனச் சாரதிகள் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன், பெக்கோ இயந்திரம் மற்றும் குறித்த வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதகாவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X