2025 மே 19, திங்கட்கிழமை

மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்தி விபத்து ஏற்படுத்தியவருக்குப் பிணை

Princiya Dixci   / 2016 ஜூலை 02 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவிதன்வெளிப் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (01) மாலை மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்த நபரை, இரண்டு பேர் அடங்கிய 02 இலட்சம் ரூபாய் சரீரப் பினையில் கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ. பேரம்பராஜா, இன்று சனிக்கிழமை (02) விடுதலை செய்துள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச சபைக்கு முன்னால் மோட்டார் சைக்கிளும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியும், மோட்டார் சைக்கிள் செலுத்தியவரும் விபத்து இடம்பெற்ற வேளையில் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கர வண்டி சாரதியை, கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ. பேரம்பராஜா முன்னிலையில் இன்று (02) ஆஜர்செய்த போது இரண்டு பேர் அடங்கிய 02 இலட்சம் ரூபாய் சரீரப் பினையில் விடுதலை செய்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இவ் வழக்கு விசாரணை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X