2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மதுபான விற்பனையில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பெண்களை ஞாயிற்றுக்கிழமை (07) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இப்பெண்கள் மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, திருக்கோவில் பொலிஸ் பிரிவில் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டபோது இச்சந்தேக நபர்களை கைதுசெய்ததுடன், இவர்களிடமிருந்து மதுபானத்தைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 39, 41, 47, 50 வயதுகளை உடையவர்கள் ஆவர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X