2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மனைவி கொலை: கணவனுக்கு மரணதண்டனை

Gavitha   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம.ஹனீபா

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில்,  மனைவியை தீ மூட்டி கொலை செய்த கணவனை, குற்றவாளியாக இனங்கண்ட கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்தின மாரசிங்க, அவருக்கு மரணதண்டனை விதித்து நேற்று திங்கட்கிழமை (08) தீர்பளித்தார்.

கடந்த 2010.04.27 அன்று, மனைவி தீ மூட்டி கொலைச் செய்த நபரை கைது செய்த பொலிஸார், அவருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இது தொடர்புடைய வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இவ்வழக்கு, மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு, சந்தேச நபர் மீது, சட்ட மா அதிபரினால்  மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்புடைய விசாரணை, நேற்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட போதே, இறந்த பெண்ணின் கணவரான ராஜரத்தினம் புவனரத்தினம் என்பருக்கு மரண தண்டனை  விதித்து, நீதவான் தீர்ப்பளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X