2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மனைவியை மீட்டுத் தருமாறு கோரி கணவன் போராட்டம்

Niroshini   / 2015 நவம்பர் 05 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

2014ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற தனது மனைவியை மீட்டுத் தருமாறு கோரி கணவன் நேற்று புதன்கிழமை(04) முதல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அம்பாறை, தெஹியத்தகண்டியைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான ரத்னாயக்க முதியான்ஸலாகே ருவன் சாமர ரத்னாயக்க (வயது 32) என்பவரின் மனைவியான பஸ்நாயக முதியான்ஸலாகே தியகஹே கெதர சுனேத்திரா பஸ்நாயக்க (வயது 35) என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

எனினும், தனது விருப்பத்துக்கு மாறாக இது நடந்ததாகவும்  போலியான ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு முகவர்களால் தனது மனைவி அனுப்பப்பட்டதாகவும் இதனால்,தனது மனைவியை மீட்டுத் தருமாறு கோரி கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னால் புதன்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகிறார்.

இதேவேளை, குறித்த நபருக்கெதிராக பல்வேறு சமூக விரோத குற்றச் செயல்கள் தொடர்பில் 11 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதேவேளை,அவரது மனைவியும் சட்டவிரோதமாக மான் இறைச்சியை வைத்திருந்தமைக்காக நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X