2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மருதமுனை வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 01 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனைப் பிரதேசத்தில் ஆறாம் குறிச்சியில் சனிக்கிழமை (30)  இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உறவு முறையான இருவரையே அன்றையதினம் இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வாள்வெட்டுக்கு இலக்கானவர்களின் வீட்டுக்குள் திடீரென்று புகுந்த சிலர், அங்கிருந்தவர்களுடன்

வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் அது கைகலப்பமாக மாறியதில் வாள்வெட்டு இடம்பெற்றது.  

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளதுடன், இவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

மாமா, மருமகன் ஆகியோருக்கு இடையில் காணப்பட்ட  சொத்துப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையே வாள்வெட்டுச் சம்பவத்துக்கு காரணமாக அமைந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை நாளை திங்கட்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X