Janu / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரு மான் கொம்புகள் உள்ளடங்களாக துப்பாக்கி தோட்டாக்களுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டதாக அம்பாறை மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மிருக வேட்டையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இன்று மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளால் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இரு மான் கொம்புகள் , ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் -19, எல்.எம்.ஜி ரக தோட்டாக்கள் -03 , எம் 16 ரக தோட்டாக்கள்-48 உள்ளிட்ட வெடி பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .