Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
சமூகத்தின் தேவைகள் குறித்து முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கொண்டே,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவியேற்று இருப்பதாகவும் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், விசேடமாக அமைச்சரவையில் கடந்த மூன்று மாதங்களுக்குள் முஸ்லிம் தலைமையின் தேவைப்பாடு உணரப்பட்டதைத்தொடர்ந்தே பதவிகளை ஏற்றுக்கொண்டோமென நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் தெரிவித்தார்.
ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர், அதில் தெரிவித்துள்ளதாவது: வழமை போன்று முஸ்லிம் காங்கிரஸை விமர்சித்து சந்தோசம் அடையும் கூட்டத்தினர் அதை தொடர்ந்தும் செய்து கொண்டே இருக்கின்றார்கள். அவர்களுக்கு தேசிய அரசியல் பற்றியோ முஸ்லிம் மக்களின் நலன் குறித்தோ எவ்விதமான ஆர்வமும் கிடையாது.
நமது மக்களின் காணி விவகாரங்களையும், பிரதேச சபைகள், செயலகங்கள் என்பன தொடர்பிலான தீர்க்கமான முடிவுகள் பெறப்பட்டுள்ளன. கல்முனை பிரதேசச் செயலகம், வாழைச்சேனை பிரதேசச் சபை தொடர்பிலாக பேசப்பட்டு, தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழ் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளது. அமைச்சர் வஜிர அபேவர்த்தன மிக சாதகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் எனவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago