2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி

Suganthini Ratnam   / 2016 மே 13 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கிழக்கு மாகாணப் பாடாசாலை மாணவர்களுக்கு இடையிலான மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

இதில் மாவட்ட மட்டப் போட்டிகளில் முதலாமிடம் பெற்ற மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.  

சனிக்கிழமை- வாசிப்பு 1-2, பேச்சு 1-2, ஆக்கத்திறன் வெளிப்பாடு 1, பாவோதல் 1-4, திறனாய்வு (விமர்சனம்) 5, இசையும் அசையும் 1, இசை தனி 2-5, இசை குழு 1,11, மேடை நாடகம், விவாதம், தமிழறிவு வினா விடைப் போட்டி ஆகியன நடைபெறவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை- நடனம் தனி 2-5, நடனம் குழு 1, நாட்டிய நாடகம், நாட்டார் பாடல், வில்லுப்பாட்டு, முஸ்லிம் நிகழ்ச்சி ஆகியன நடைபெறவுள்ளன.

போட்டியாளர்கள் தம்மை அடையாளப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டை அல்லது தபால் அடையாள அட்டை அல்லது அதிபர், கோட்டக் கல்வி அதிகாரி ஆகிய இருவராலும் உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படம் என்பவற்றை போட்டிகளில் சமர்ப்பிப்பது கட்டாயம்.

போட்டியாளர்கள் பொறுப்பாசிரியர்களுடன் மட்டுமே வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X