Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசஸூடன் இணைந்து, அக்கட்சிக்காக பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
அத்துடன் அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன் அக்கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார்.
இதன் காரணமாக கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் அக்கட்சியில் அவர் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை விலக்குவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்படுவதுடன் அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாதை நியமிப்பது எனவும் முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே, தன்னை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கியமை சட்டத்துக்கு முரணானது என கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
19 minute ago
25 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
42 minute ago
1 hours ago