2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் மீளவும் ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம், எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கொழும்பில் அதன் தலைமையகமான தாருஸ்லாமில் நாளை செவ்வாய்க்கிழமை இக்கூட்டம் நடைபெறவிருந்தது. நாளையதினம்  கிழக்கு மாகாண சபை அமர்வு நடைபெறவுள்ளதால், அதில் தமது கட்சியின் சார்பில் அங்கம் வகிக்கின்ற எட்டு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.  இதனாலேயே, இந்தக் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறிருக்க, கடந்த 15ஆம் திகதி நடைபெறவிருந்த மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு  தொடர்ச்சியான விடுமுறை காரணமாக அனைத்து உயர்பீட உறுப்பினர்களின் வசதி கருதி நாளையதினம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதன் கூட்டம் மீளவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X