2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனைப் பிரதேசத்தில் திவிநெகும உதவி பெறும் குடும்பங்களில் சீட்டிழுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக முச்சக்கரவண்டி கல்முனை திவிநெகும வலய வங்கி அலுவலகத்தில்  வைத்து இன்று புதன்கிழமை வழங்கப்பட்டது.

மேற்படி பிரதேசத்தில் திவிநெகும உதவி பெறும் 11 குடும்பங்;கள் வாழ்வாதார உதவிக்காக சீட்டிழுப்பு  மூலம் தெரிவுசெய்யப்பட்டன.

இக்குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கு 150,000 ரூபாய் படி 11 குடும்பங்களுக்கும் 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் படி வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 08 குடும்பங்களுக்கு வீடமைப்புக்கும் ஒரு குடும்பத்துக்கு முச்சக்கரவண்டியும் ஒரு குடும்பத்துக்கு சிறு வியாபார நடவடிக்கைக்கும் ஒரு குடும்பத்துக்கு கடற்றொழிலுக்கான வாழ்வாதார உதவியாக வள்ளமும் வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X