2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாடுகள் திருட்டுப் போனமை தொடர்பில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, அட்டாளைச்சேனை சம்புநகர் பிரதேசத்தில் இரண்டு மாடுகள் திருட்டுப் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மாட்டு வியாபாரி ஒருவரை  நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டு வளவொன்றில் வளர்க்கப்பட்டு வரும் இரண்டு மாடுகள் கடந்த 24ஆம் திகதி நள்ளிரவு திருட்டுப் போயுள்ளன. இம்மாடுகள் திருட்டுப் போன வேளையில்  இச்சந்தேக நபர் அப்பகுதியில் நடமாடியதாகத் தெரியவந்துள்ளது.  இதன் அடிப்படையிலேயே இச்சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாடுகள் திருட்டுப்போன சம்பவம் தொடர்பாக இந்தச் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் வெளிவந்தவர் எனவும் பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X