2025 மே 22, வியாழக்கிழமை

மேட்டு நில பயிர்ச்செய்யை மேற்கொள்ள நடவடிக்கை

Gavitha   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அரசாங்கத்தின் மூன்றாண்டு காலத் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோக நெற் செய்கையுடன் இணைந்ததாக மேட்டு நில பயிர்ச் செய்கையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் நேற்று புதன்கிழமை  (03) புதன்கிழமை தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை, தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதற்கமைய,  அம்பாறை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகங்களில் சுமார் 5 ஆயிரது 500 ஹெக்டேயரில் உப உணவுப் பயிர் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பயறு, கௌபி, சோளம் போன்ற உப உணவுப் பயிர்கள் செய்கை செய்யப்படவுள்ளதோடு, இது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் உப உணவுப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கு முன் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நெல்லுக்கான விலை, தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் உப உணவுப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு விவசாயிகள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் நெற் செய்கையுடன் இணைந்ததாக உப உணவுப் பயிர்ச் செய்கையும் அதிகரிப்பதோடு இதன் மூலம் கூடுதலான வருவாயையும் பெற முடியுமென பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் மேலும் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X