Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 13 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்,எஸ்.கார்த்திகேசு,வி.சுகிர்தகுமார்
அம்பாறை, திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து பலியாகியுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று, கோளாவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தங்கவடிவேல் தயாபரன் (வயது 34) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் நேற்று வியாழக்கிழமை காலை தங்கவேலாயுதபுரம் பிரதேசத்துக்குச் சென்றுள்ளனார். அங்கு மதுபானம் அருந்தியும் சமைத்து உணவை உட்கொண்டு தங்களின் பொழுதைக் கழித்துள்ளனர். பின்னர் மாலை தங்களின் வீடுகளுக்கு அவசரமாக மோட்டார் சைக்கிள்களில் இவர்கள் திரும்பியுள்ளனர். இதன்போது, தங்கவடிவேல் தயாபரன் என்பவர் தலைக்கவசம் அணியாது தனியாக மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதனை அடுத்து இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே மேற்படி சந்தேக நபர்களைக் கைதுசெய்து விசாரணையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
50 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
7 hours ago