2025 மே 19, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி; ஒருவர் படுகாயம்

Princiya Dixci   / 2016 ஜூலை 07 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜமால்டீன்
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயங்களுக்குள்ளான நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தப்பித்துச்சென்றுள்ளார்.

இவ்விபத்துச்சம்பவம், அம்பாறை, ஒலுவில் வெளிச்சவீட்டு வீதியில், நேற்று புதன்கிழமை (06), பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாக அக்கறைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், அஹமட் லெப்பை அசாரூடீன், ஒலுவில் -01, அஷ்ரப் நகரைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஒலுவில் பிரதானவீதி சந்தியிலிருந்து ஒலுவில் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருமோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் தப்பித்துச் சென்றவரைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X