2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு பிணை

Niroshini   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

பரீட்சை மண்டபத்தில் வைத்து மணவியை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம்  செய்த சந்தேக நபரான  ஆசிரியரை அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி ஒரு இலட்சம் ரூபாய் இரு சரீரப்பிணையில் விடுவித்தார்.

இன்று (05) மன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பாலமுனைப் பிரதேச பாடசாலை ஒன்றில் நேற்று (04) காலை முதலாம் தவணைப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தரம் 11 வகுப்பில் கல்வி பயிலும்  16 வயதுடைய குறித்த மாணவி பரீட்சை எழுதிக்கொண்டிக்கும் போதே பரீட்சை கடமையிலிருந்த ஆசிரியர் மாணவி மீது பாலியல் சேட்டை புரிந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் சந்தேக நபரான 41 வயதுடைய ஆசிரியரை கைது செய்து மன்றில் இன்று ஆஜர்படுத்தினர்.

இதன்போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X