Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை இறக்காமப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக இறக்காமம் சமுதாய புனரமைப்பு மன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சின் அலுவலகத்தில் சமுதாய புனரமைப்பு மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி பாறூக் சாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் அமைப்பின் செயலாளர் ஆர்.ஜே.சன்சீர் உட்பட உறுப்பினர்கள் முதலமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, இறக்காமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பாக முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டியதுடன் இறக்காமம் பிரதேசத்துக்கு தாங்கள் நேரில் வருகை தந்து எமது பிரதேசத்தில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களை நேரில் வந்து பார்வையிடுமாறும் சமுதாய புனரமைப்ப மன்றத்தின் குழவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் இன மத பேதமின்றி எனது சேவையினை தற்போது மூவின மக்களும் நன்மை அடையும் வகையில் மேற்கொண்டு வருகின்றேன்.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில மூவின சமூகத்துக்கும் சொந்தக்காரன் என்ற வகையில் பிரதேசவாதம் பாராது ற மூவின மக்களும் பரந்து வாழக்கூடிய மாவட்டங்களில் கிழக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு ஒரு சில இடங்களில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, கிழக்கு மாகாண சபையினால் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ள இருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின்போது இறக்காமம் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு என்னால் முடியுமான அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago