Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
ஒலுவில் அல்- ஹம்றா மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்துக்கான சுற்றுமதில் நிர்மாணிக்கப்படாதுள்ளதால் கால்நடைகளின் தங்குமிடமாக மாறியுள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது, பாடசாலை மைதானத்தை சுற்றி சுற்று மதிள் பூரணமாக நிர்மாணிக்கப்படாமல் காணப்படுவதால் இன்று கால்நடைகளின் தங்குமிடமாக மாறியுள்ளது.
அது மாத்திரமன்றி இந்த மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு இன்னும் பூரணப்படுத்தப்படாமல் அரை குறை நிலையிலும் பற்றைக்காடு வளர்ந்த நிலையிலும் பாழடைந்து காட்சியளிக்கின்றது.
இரவு நேரங்களில் கால்நடைகள் வந்து படுத்துறங்கி மலம் களிப்பதால் மைதானம் முழுவதும் கால்நடைகளின் கழிவுகளினால் நிரம்பிக்காணப்படுகின்றது.
இதனால் தினமும் காலை வேளைகளில் மாணவர்கள் ஈடுபடுகின்ற உடற்பயிற்சியினை முறையாக மேற்கொள்ள முடியாதுள்ளது.
அது மாத்திரமன்றி மைதானத்தில் காணப்படும் கால்நடைகளின் கழிவுகளினால் மாணவர்களின் ஆடைகள் அழுக்கடையும் நிலைக்கு தள்ளப்பட்டள்ளது.
இப்பாடசாலை மாணவர்கள் பல்வேறு துறைகளில் பலசாதனைகளை புரிந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
இவ்வாறான ஒரு நிலையில் இப்பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு தங்களது திறமைகளை மேலும் வள்ர்த்துக் கொள்வதற்கு இம்மைதானம் தற்போதைய நிலையில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.
மேலும் ஒலுவில் பிரதேசத்தில் பொதுவிளையாட்டு மைதானம் ஒன்று இல்லாமையினால் பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்கள் கூட மாலை நேரங்களில் இம்மைதானத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளன.
எனவே, இம்மைதானத்தின் அவல நிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மைதானத்தை சுற்றிவர மதில் அமைப்பதற்கும் பாழடைந்த நிலையில் காணப்படும் பார்வையாளர் அரங்கை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் மாணவர்கள் விளையாட்டு கழகங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
18 minute ago
24 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
41 minute ago
1 hours ago