2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முதியோர் கௌரவிப்பு நிகழ்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதியோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.அன்வர் தலைமையில்  நடைபெற்றது.

இதில்,அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எம்.சம்சுதீன், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்களான ஏ.எம்.தமீம், ஏ.ஹுஸைனுதீன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.சரீப், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.ஸியாத், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.கைஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர்கள் மட்டத்திலும்  பாடசாலை மாணவர்களிடையேயும்  நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் கலந்து கொண்ட அனைத்து முதியோவர்களுக்கு சாரமும் வயோதிபப் பெண்களுக்கு சாரியும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப் கருத்து தெரிவிக்கையில்,

முதியோர்கள் எமது முதுசம்கள். அவர்களது அறிவு மற்றும் அனுபவம் என்பன எங்களுக்கு எப்போதும் வழிகாட்டியாக இருக்கும். அவர்களின் நலன்களைப் பேண வேண்டியது எமது தலையாய கடமையாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .